திருச்சி மாவட்டத்தில் புதிய உயிரியல் பூங்கா ஒன்று வர இருக்கிறது . இதற்கான விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது .

திருச்சி அருகே உள்ள எம்.ஆர். பாளையத்தில் அமையவிருக்கும் உயிரியல் பூங்காவின் புதிய திட்ட வரைபடம் மற்றும் விரிவான திட்ட அறிக்கை மத்திய உயிரியல் பூங்கா ஆணையத்தின் ஒப்புதலுக்காக வனத்துறை சமர்ப்பித்துள்ளது. இந்த பூங்கா அமைக்கும் பணி பல ஆண்டுகளாக இழுபறியிலேயே இருந்து வந்தது. தற்போது, புதிய வழிகாட்டுதல்களின்படி இந்த திட்டத்தை மீண்டும் தயார் செய்து, ஒப்புதலுக்காக அனுப்பியுள்ளனர்.

இந்த புதிய வரைபடத்தில், விலங்குகளின் இருப்பிடங்கள், அவற்றின் பாதுகாப்பு, பார்வையாளர்களின் பாதுகாப்பு, பூங்காவிற்குள் நுழையும் மற்றும் வெளியேறும் வழிகள் போன்ற அனைத்து விவரங்களும் இடம்பெற்றுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *