முதன்மைச் சிறப்புக் கூறுகள்
இராமேஸ்வரத்தில் நிறைவு விழா – இந்த ஆண்டு நிகழ்வுகளின் பிரமாண்டமான முடிவு.
புதிய முயற்சிகளின் தொடக்கம்:
- தமிழ் கற்போம் – வட இந்திய மாணவர்கள் தமிழ் மொழியைக் கற்கத் தமிழ்நாட்டிற்கு வருகை.
- அகத்தியர் பயணம் – பாரதத் திருநாட்டிற்குத் தமிழகத்தின் பங்களிப்பை முன்னிலைப்படுத்தும் முகமாகத் தென்காசி முதல் காசி வரை பயணம்.
காசித் தமிழ்ச் சங்கமம் 4.0 டிசம்பர் 2, 2025 முதல் தொடங்கும்.
அறிமுகம்
காசித் தமிழ்ச் சங்கமம் (KTS) என்பது அறிவைத் தேடுவதிலும் இந்தியப் பண்பாட்டின் ஒற்றுமையை அடையாளம் காண்பதிலும் தொடர்ந்து நடைபெறும் பயணமாகும். முந்தைய நிகழ்வுகளின் வெற்றியைத் தொடர்ந்து, இந்த முயற்சியும் தமிழ்நாட்டிற்கும் காசிக்கும் இடையேயான பண்பாடு, அறிவுசார் உறவுகளை வலுப்படுத்தி, “ஒரே பாரதம் உன்னத பாரதம்” என்னும் உணர்வினை வெளிப்படுத்துகிறது.
காசித் தமிழ்ச் சங்கமத் தொடக்கம்: KTS 1.0 (2022)
காசித் தமிழ்ச் சங்கமத்தின் முதல் நிகழ்வினை மத்திய அரசின் கல்வி அமைச்சகமும் உத்தரப்பிரதேச மாநில அரசும் இணைந்து 2022 நவம்பர் 16 முதல் டிசம்பர் 15 வரை நடத்தின. தமிழ்நாட்டிலிருந்து வந்த 2500-க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள், 12 வெவ்வேறு வாழ்க்கைத் துறைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நிலையில், 8 நாள் பயணங்களில் வாரணாசி, பிரயாக்ராஜ், அயோத்திக்குப் பயணம் செய்தனர். இப்பயணத்தின் போது அவர்கள் வாரணாசி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களைப் பற்றி ஆழமான அனுபவத்தைப் பெற்றனர். இந்த நிகழ்வு வாரணாசியில் உள்ள பனாரஸ் இந்துப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.
KTS 2.0 (2023): அறிவுசார் மற்றும் பண்பாட்டு உறவுகளை வலுப்படுத்துதல்
இரண்டாம் நிகழ்வு (KTS 2.0) டிசம்பர் 17 முதல் 30, 2023 வரை வாரணாசியில் உள்ள நமோ படித்துறையில் நடைபெற்றது. இந்நிகழ்வு மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது. இதில் முதல் முறையாகப் பாரதப் பிரதமர் உரையின் ஒரு பகுதி தமிழில் நிகழ்நேரச் செயலி அடிப்படையிலான மொழிபெயர்ப்புடன் வழங்கப்பட்டது.
KTS 3.0 (2025): இந்திய அறிவு மற்றும் பாரம்பரியத்தைச் சமகாலச் சொல்லாடலுடன் இணைத்து நவீன காலத்தை முன்னெடுத்தல்
மூன்றாம் நிகழ்வு (KTS 3.0) 2025 பிப்ரவரி 15 முதல் 24 வரை நடைபெற்றது. இது அகத்திய முனிவரின் பங்களிப்பை முன்னிலைப்படுத்தி, இந்திய அறிவு மரபைச் சமகாலச் சொல்லாடலுடன் இணைத்தது. தமிழ்நாட்டிலிருந்து சுமார் 1000 பிரதிநிதிகள் இந்நிகழ்வில் பங்கேற்றனர். மேலும், பல்வேறு மத்தியப் பல்கலைக்கழகங்களிலிருந்து 200 மாணவர்களும் பங்கேற்றனர்.
காசித் தமிழ்ச் சங்கமம் 4.0 மையக் கருத்து
“தமிழ் கற்போம் – Tamil Karpom” என்பது KTS 4.0இன் மையக் கருத்தாகும். இது இந்நிகழ்வினை ஒருங்கிணைக்கும் அம்சமாக இருக்கும். இந்த மையக் கருத்து “பாரத நாட்டின் அனைத்து மொழிகளும் நமது மொழிகளே. அவை ஒரே பாரத மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தவை” என்னும் செய்தியைப் பரப்புகிறது.
இந்த முயற்சி தமிழ் மொழியினை நாட்டின் பிற பகுதிகளுக்கும் எடுத்துச் செல்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது பண்பாட்டு ஒற்றுமையைக் குறிக்கிறது; செம்மொழித் தமிழ் நூல்களில் பாதுகாக்கப்பட்ட பண்டைய அறிவின் எல்லைகளை விரிவுபடுத்திப் பிற இந்திய மொழிகளில் அதன் பரவலை ஊக்குவிக்கிறது; இந்தியாவின் மொழிப் பன்முகத்தன்மையையும் ஒற்றுமையையும் கொண்டாடுகிறது. அதே நேரத்தில் தமிழ் மொழி, இலக்கியத்தின் வளமான பாரம்பரியத்தையும் மேம்படுத்துகிறது.
இந்த ஆண்டு நடைபெறும் காசித் தமிழ்ச் சங்கமத்தின் முதன்மைச் சிறப்புக் கூறுகளில் ஒன்று இராமேஸ்வரத்தில் நிறைவு விழா என்பதாகும். இது இந்நிகழ்வின் பிரமாண்டமான முடிவைக் குறிக்கிறது. மேலும் இரண்டு புதிய முயற்சிகளின் தொடக்கம்: 1. “தமிழ் கற்போம்” – வட இந்திய மாணவர்கள் தமிழ்நாட்டில் தமிழைக் கற்க உதவுதல்.
2. “அகத்தியர் பயணம்” – பாரதத் திருநாட்டிற்குத் தமிழகத்தின் பங்களிப்பை முன்னிலைப்படுத்தும் முகமாகத் தென்காசி முதல் காசி வரை பயணம்.
முதன்மைச் சிறப்புக் கூறுகள்
இராமேஸ்வரத்தில் நிறைவு விழா – இந்த ஆண்டு நிகழ்வுகளின் பிரமாண்டமான முடிவு.
புதிய முயற்சிகளின் தொடக்கம்:
- தமிழ் கற்போம் – வட இந்திய மாணவர்கள் தமிழ் மொழியைக் கற்கத் தமிழ்நாட்டிற்கு வருகை.
- அகத்தியர் பயணம் – பாரதத் திருநாட்டிற்குத் தமிழகத்தின் பங்களிப்பை முன்னிலைப்படுத்தும் முகமாகத் தென்காசி முதல் காசி வரை பயணம்.

Activity agi vitada
December – 2 – 2025 it’s live