தமிழகத்தில் பெரும்பாலான கோயில்கள் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளன. இந்த கோயில்களில் உள்ள பணியிடங்களையும் அறநிலையத்துறை நிரப்பி வருகிறது. அந்த வகையில், தற்போது சென்னை கபாலீசுவரர் திருக்கோயிலில் காலிப் பணியிடங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
பணி விவரம்:
சென்னை மயிலாப்பூர் கபாலீசுவரர் திருக்கோயலில் காலியாக உள்ள 19 காலிப் பணியிடங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதாவது, உதவி பொறியாளர், தமிழ் புலவர், குருக்கள், காவலர் ஆகிய பணிகளுக்கு தலா ஒரு இடங்களும், உதவி பரிச்சாரகர், உதவி மின்பணியாளர், இளநிலை உதவியாளர் ஆகிய பணிகளுக்கு தலா 2 இடங்களும், சீட்டு விற்பனையாளர், பாரா ஆகிய பணிகளுக்கு மூன்று இடங்களும் நிரப்பப்படுகிறது. மொத்தமாக 19 காலிப் பணியிடங்கள் நிரப்பப்டுகிறது.
கல்வித்தகுதி:
காவலர், பாரா பணியிடங்களுக்கு தமிழில் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும். உதவி பொறியாளர் பணிக்கு கட்டட பொறியியலில் இளநிலைய பட்டம் அல்ல பொறியாளர்களுக்கான கல்வி நிறுவனத்தில் பிரிவு ஏ மற்றும் பி-இல் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், கட்ட பொறியியலை ஒரு பாடமாக படித்திருக்க வேண்டும்.
இளநிலை உதவியாளர் பணிக்கு 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சீட்டு விற்பனையாளர் பணிக்கு 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், அரசு தொழில்நுட்ப தட்டச்சர் தேர்வில் தட்டச்சு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் முதுநிலை அல்லது தமிழில் முதுநிலை மற்றும் ஆங்கிலத்தில் இளநிலை படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தமிழ் புலவர் பணிக்கு ஏதேனும் ஒரு பல்கலைக்கழகததில் தமிழில் B.Lit/B.A அல்லது M.A அல்லது M.Lit பட்டம் கல்வித்தகுதீ பெற்றிருக்க வேண்டும். திருமுறைகள் ஒப்புவித்தலில் திறன் பெற்றிருக்க வேண்டும். உதவி மின்பணியாளர் பணிக்கு அரசால் ஆங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தால், மின் கம்பிப் பணியாளர் தொழில் பயிற்சி நிறுவன சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
குருக்கள் பணிக்கு தமிழில் படிக்க, எழுத தெரிந்திருக்க வேண்டும். ஏதேனும் சமய நிறுவனஙகளால் நடத்தப்படும் ஆகமப் பள்ளி அல்லது வேதபாட சாலையில் தொடர்புடைய துறையில் ஓராண்டு படிப்பினை மேற்கொண்டதற்கான சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம் எவ்வளவு
உதவி பரிச்சாரகர் பணிக்கு மாத சம்பளமாக ரூ.10,000 முதல் ரூ.31,500 வழங்கப்படுகிறது. காவலர் பணிக்கு ரூ.11,600 முதல் ரூ.36800, குருக்கள் பணிக்கு ரூ.11,600 முதல் ரூ.36800, பாரா பணிக்கு ரூ.15900 முதல் ரூ.50,400, உதவி மின்பணியாளர் ரூ.16600 முதல் ரூ.52,400, தமிழ் புலவர், சீட்டு விற்பனையாளர், இளநிலை உதவியாளர் பணிக்கு ரூ.18,500 முதல் ரூ.58600, உதவி பொறியாளர் பணிக்கு ரூ.36700 முதல் ரு.1.16 லட்சம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிப்பது எப்படி?
மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் hrce.gov.in என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய தகுதிச் சான்றுகளுடன் நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ டிசம்பர் 28ஆம் தேதி மாலை 5.45 மணிக்குள் திருக்கோயில் அலுவலகத்தில் நேரில் கொடுக்கவோ அல்லது தபால் மூலமும் அனுப்பி வைக்லாம்.
அனுப்ப வேண்டிய முகவரி:
இணை ஆணையர்/செயல் அலுவலர், அருள்மிகு கபாலீசுவரர் திருக்கோயில்,மயிலாப்பூர் – சென்னை 600004.
