பிஎம் கிசான் திட்டத்தில் விரைவில் 21வது தவணைத்தொகை விடுவிக்கப்பட இருக்கும் நிலையில், அதுதொடர்பான அப்டேட்டுகள் வரிசையாக வெளியாகிக் கொண்டே இருக்கின்றன. குறிப்பாக, தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு ஒவ்வொரு மாவட்ட ஆட்சியரும் இது தொடர்பான அறிவுறுத்தல்களை தொடர்ச்சியாக வழங்கி வருகின்றனர். இப்போது தென்காசி மாவட்ட ஆட்சியர் அந்த மாவட்ட விவசாயிகளுக்கு இன்று ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். பிஎம் கிசான் திட்டத்தில் பயனாளியாக இருந்து விவசாயிகள் தனித்துவ அடையாள எண் பெறாத விவசாயிகள் இ-சேவை மையம் மூலம் விண்ணப்பிக்கலாம் என அவர் அறிவித்துள்ளார்.
