கோவையில் விமான நிலையம் அருகே நண்பருடன் பேசிக் கொண்டிருந்த ஒரு சட்டக் கல்லூரி மாணவி, மூன்று சமூக விரோதக் கயவர்களால் கூட்டுப் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார். இந்தச் செய்தி தமிழகத்தையே உலுக்கியுள்ளது. இந்த கோரச் சம்பவம், ஒரு தனிப்பட்ட நிகழ்வாகப் பார்க்க முடியாது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 39% அதிகரித்திருப்பதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (NCRB) வெளியிட்ட புள்ளிவிவரத்தின் கொடூரமான நிஜ வடிவமே இந்தக் குற்றம்.சமூக விரோதிகள் இவ்வளவு துணிச்சலாகச் செயல்படுவதற்கு ஒரே காரணம், இந்த தி.மு.க அரசும் காவல்துறையும் சட்டம் ஒழுங்கைப் பேணுவதில் படுதோல்வி அடைந்துவிட்டதுதான்.மக்களைக் காக்க வேண்டிய காவல்துறையை, அரசியல் பழிவாங்கலுக்கும், எதிர்க்குரல்களை ஒடுக்கவும் மட்டுமே தி.மு.க அரசு பயன்படுத்துவதால், குற்றவாளிகளின் ஆதிக்கம் மேலோங்கியுள்ளது. பெண்களுக்குப் பாதுகாப்பு அரணை உருவாக்கத் தவறிய தமிழக முதலமைச்சர் திரு.M. K. Stalin இந்தச் சீரழிவுக்குப் பதில் சொல்லியே ஆக வேண்டும்.#DMKFails
